மட்டக்களப்பு வாகரையில் காயங்களுடன் கரையொதுங்கிய டொல்பின்கள்!

0
149

மட்டக்களப்பு வாகரை காயங்கேணி கடற்பரப்பில் டொல்பின் வகை மீன்கள் இன்று கரையொதுங்கியதை அவதானிக்க முடிந்தது.
இன்று காலை வழக்கத்திற்கு மாறாக இவ் வகை மீன்கள் ஆழ்கடல் பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி வந்திருந்ததாகவும்,
அவற்றினை மீண்டும் கடலில் விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வாகரை பிரதேச செயலாளர் டி.அருணன்
தெரிவித்தார்.
கடற்றொழில் திணைக்களம்,கஜீவத்தை கடற்படையினர், நாரா, கிரான்,அம்பாறை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச மீனவ சங்கங்கள் இணைந்து
மீன்களை ஆழ்கடலில் விடுவித்தனர்.
காயமடைந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்கள் சிலவற்றிற்கு, ஊசி மூலம் மருந்தேற்றப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.