மட்டக்களப்பு வாகரையில் மேற்கொள்ளப்படும், கனிய மண் அகழ்வு, இறால் பண்ணை திட்டங்களுக்கு எதிராக, முற்போக்கு தமிழர் கழகத்தின்
ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில், வாகரையில் இருந்து கதிரவெளி பிரதேச செயலகம் வரை பேரணியொன்றும் இடம்பெற்றதோடு,
பிரதே செயலாளரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டது.
பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களும் போராட்டம் மற்றும் பேரணியிலும் பங்கேற்றனர்.