மட்டக்களப்பு வாகரையில் கூட்டுறவுச் சங்கங்களின் பாரம்பரிய உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு – வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் சந்தைப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வானது அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ. திலீப்குமார் தலைமையில் நடைபெற்றது. வாகரை உதவி பிரதேச செயலாளர் அர்ச்சனா புவேந்திரன, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ. சுதர்ஸன் உட்பட அரச அதிகாரிகள், பொதுமக்கள், கிராம மட்டக் கூட்டுறவுச் சங்கங்கள், சூழல் சுற்றாடல் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.