மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருவேறு இடங்களில் இடம் பெற்ற அனர்த்தங்களில் இருவர் உயிரிழப்பு

0
90

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில், நேற்று மாலை இருவேறு இடங்களில் இடம்பெற்ற அனர்த்தங்களில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறிய நிலையில் 43 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.
முறுத்தானையில் உள்ள வெத்திலை போட்ட மடு குளப் பகுதியில் கட்டுவலை கட்டி, மீன்பிடியில் ஈடுபட்டவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையான 67 வயதுடைய மூ.மயில்வாகனம் என்பவரே முதலைக்கடிக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.
இவ் மரணச் சம்பவங்களின் உடற்கூற்றாய்வினை சுகாதார வைத்திய அதிகாரி எச்.எம்.எம். முஸ்தபா முன்னெடுத்ததோடு, தீடிர் மரண விசாரணையினை மரண விசாரணை அதிகாரி அ.ரமேஸ்ஆனந் மேற்கொண்டார்.