25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு வாழைச்சேனையில், ‘புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம்’என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும், வாழைச்சேனை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவும் இணைந்து, வாழைச்சேனையில் விழிப்புணர்வு நடைபவனியொன்றை இன்று முன்னெடுத்தன.


விழிப்புணர்வு நடைபவனி, வாழைச்சேனை இந்துக்கல்லூரி முன்பாக ஆரம்பமாகி, கல்குடா வீதி மற்றும் பிரதான வீதி வழியாக, வாழைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.


வாழைச்சேனை பிரதேச சபை முன்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயிலிருந்து அவர்களை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுதர சேவைகள் பாணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு செயற்பாடுகளில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் தனியார் நிறுவனம் மற்றும் பெண்கள் அமைப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles