மட்டக்களப்பு வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்

0
132

மட்டக்களப்பு பேத்தாழையில், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.


வாழ்வின் உதய தலைவர் சண்முகநாதன் சஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக வாணிப இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியழேந்திரன் கலந்துகொண்டார்.


வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகஸ்த்தர் ஏ.எம்.எம்.அலியார் ஆகியோரும்
அதிதிகளாகப் பங்கேற்றனர்.


விசேட தேiவையுடையோர்களின் கலை,கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.
பிரதேசத்தில் ஜந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு, பரிசில்களும் வழங்கப்பட்டன.


கலாச்சார நிகழ்வில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் தலைமைக்
குடும்பங்களை மேம்படுத்தல் நிகழ்வும் நடைபெற்றது.