மட்டக்களப்பு வின்சென்ட்பெண்கள் தேசியப் பாடசாலையில்,58 மாணவிகள் 9ஏ சித்தி!

0
94

வெளியான கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சையில், மட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் தேசியப் பாடசாலையில், 58 மாணவிகள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.


பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகள் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், மட்டக்களப்பு கல்வி வலய நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் சாமினி ரவிராஜ், கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான நிதர்சினி மகேந்திரகுமார், என்.குகதாசன் மற்றும் பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.