சைக்களில் சென்றவரை வீதி அபிவிருத்தி பணிக்காக கற்களை ஏற்றிச் சென்ற கனகர வாகனம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மட்டக்களப்பு – மாவடிவேம்பு – பண்ணை வீதியில் இன்று பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவலிங்கம் பவானந்தகுமார் என்பவரே உயிரிழந்தார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சந்திவெளி பொலிஸார் வாகன சாரதியை கைது செய்ததுடன், நிலைமையையும் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
விபத்துக் குறித்து மேலதி விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.