மட்டக்களப்பு வேல்ஸ் நடனக் கல்லூரியின் கௌரவிப்பு நிகழ்வில், தென்னிந்திய தொலைக்காட்சியொன்றால், நடாத்தப்பட்ட பாடல் போட்டியில்
முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட, இலங்கைப் பாடகி கில்மிஸா கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தமிழ் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
வேல்ஸ் நடனக்கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.கிருஸ்ணா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.முரளிதரன்,கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி மு.கோபாலகிருஸ்ணன், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் ,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.சிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பல்வேறு நடனத்துறை கலைஞர்களையும் உருவாக்கிய பெருமை கொண்ட நடன ஆசான் கலாபூசணம் திருமதி சுமித்திரா பிரபாகரன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி
கௌரவிக்கப்பட்டார்.