மட்டு. ஏறாவூரில் இப்தார் நிகழ்வு நடைபெற்றது

0
105

மட்டக்களப்பு- ஏறாவூர் றகுமானியா பாடசாலையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நடைபெற்றது. தேசிய காங்கிரஸ் கட்சியின் இணைப்பாளர் ஹனிபாவின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா கலந்து கொண்டார். இப்தார் நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

நாட்டின் ,இனப் பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டுமானால் குறைந்தபட்சம் காணிப்பங்கீடு, அரச உத்தியோகம் வழங்குவது விகிதாசாரத்திற்கேற்ப செய்யப்பட வேண்டும் என தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும்
முன்னாள் அமைச்சருமான அதாஉல்லா தெரிவித்தார்.