மட்டு.ஏறாவூரில் பெண்களுக்கான
விழிப்புணர்வு கருத்தரங்கு

0
278

ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி லெப்டினன் கேனல் டீ.எம்.அனஸ் அஹமட் அவர்களின் வழிகாட்டலில்
பரகா ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும் பரகா விளையாட்டுக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று மாலை இடம் பெற்றது.
சட்டவிரோதமான போதைப் பொருள் பாவனையினை இல்லாதொழித்தல் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுத்தல், சகல இலங்கை பிரஜைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக சிறந்த கிராமத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டமாக ‘போதைப் பொருளற்ற ஏறாவூர் மிச்நகர் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக இவ் விழிப்புணர்வு இடம் பெற்றது.

இதன் போது போதையற்ற மிச் நகரை உருவாக்குவோம், போதை காசு கொடுத்து வாங்கும் மரணம் ,போதைப் பொருட்கள் விற்று சமூகத்தை சீரழிக்காதே! புகை மனிதனுக்குப் பகை என்ற அடிப்படையிலான விழிப்பூட்டும் வாசகங்கள் அங்கு எழுதப்பட்டு மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பரகா ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எச்.சபூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத்தபால மற்றும் இராணுவ அதிகாரி லெப்டினன் கேனல் டீ.எம்.அனஸ் அஹமட் ,ஏறாவூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.எச்.காரியப்பர் , சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தரும் உளவளத் துணையாளர் ஆலோசகருமான எம்.எஸ்.எம்.இக்ராம் உட்பட கிராமசேவையாளர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைக்கு எதிராக செய்யப்படுவதன் அவசியம் குறித்த தெளிவூட்ல்களை வழங்கினார்கள்.

நிகழ்வின் போது முக்கிய அதிதிகள் பள்ளிவாயல் நிர்வாகத்தினரால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், இவ்வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக திட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.