29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.கருவேப்பங்கேணி விபுலானந்த
வித்தியாலயத்தில் நிகழ்வுகள்

மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலானந்த வித்தியாலயத்தில் சிவானந்தா நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் மகிழ்ச்சிகர மாணவர் பயணம் எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றது. பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் கற்றல் தேவைகளுக்கு உதவும் முகமாக ‘ மகிழ்ச்சிகர மாணவர் பயணம் ‘ எனும் தொனிப்பொருளில் 1998 மற்றும் 2001 ஆம் ஆண்டு சாதாரண தர மற்றும் உயர்தரத்தில் சிவானந்தாவில் படித்த மாணவர்களின் மாதாந்தச் செயற்பாடாக மகிழ்ச்சிகர மாணவர் பயணம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் அவுஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் விசேட வைத்திய நிபுணரான த. சுஹாஜனன் நிதி உதவியில் மகிழ்ச்சிகர மாணவர் பயணத்தின் ஐந்தாவது திட்டத்தில் மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலானந்த வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட சுமார் 40 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டது.அதிபர் எஸ் .சாந்தகுமார் தலைமையில் மாவட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர் வி.பூபாலராஜாவின் ஒருங்கிணைப்பில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலை 98,2001 நண்பர்கள் வட்ட அங்கத்தவர்களான வசந்தகுமார் , மகேந்திரன் ஆகியோரினால் மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கப்பட்டன.

மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க புலமைப் பரிசில் பரீட்சை எழுத்தவுள்ள மாணவர்களுக்கான விசேட வகுப்புக்களுக்கான மாதாந்த நிதியினை வழங்குவதற்கும் நிகழ்வின் போது ஏற்பாட்டளர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles