வெளியான 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சசையில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் மூன்று ஏ சித்திகளை பெற்று பொரியல்துறைக்கும் ,மருத்துவ துறைக்கும் ,கலைத்துறைக்கு ,வர்த்தக துறைக்குமாக நான்கு மாணவிகள் தெரிவாகியுள்ளதாக கல்லூரி அதிபர் என் .தர்மசீலன் தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சசைக்கு தோற்றிய 99 மாணவர்களில் 61 வீதமானவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாகவும் கடந்த வருடங்களை விட இந்த வருடம் மாணவர்களின் பெறுபேறுகளின் அடைவு மட்டம் உயர்ந்துள்ளதாக கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களில் மாணவி மதுரக்சி மகேந்திர ராஜா மூன்று திறமை சித்திகளை பெற்று பொறியியல் துறைக்கும் ,மாணவி சிறிதரன் வேனுஜா மூன்று திறமை சித்திகளை பெற்று மருத்துவ துறைக்கும் , , மாணவி பிரபாகரன் மிருசிகா மூன்று திறமை சித்திகளை பெற்று கலைத்துறைக்கும, மாணவி பவித்திரா பஞ்சாசரம் மூன்று திறமை சித்திகளை பெற்று வர்த்தக துறைக்கு என நான்கு மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் என் .தர்மசீலன் தெரிவித்துள்ளார்