மட்டு.காத்தான்குடியில், சமூக நலன் கொடுப்பனவு ஆய்வு தொடர்பில் மீளாய்வுக் கூட்டம்

0
166

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக நலன் கொடுப்பனவு ஆய்வு மற்றும் உணவு பாதுகாப்பு ஆய்வு வேலைத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதரின் வழிகாட்டலில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சில்மியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமூக நலன் கொடுப்பனவு ஆய்வு மற்றும் உணவு பாதுகாப்பு ஆய்வு வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது.

இந்த ஆய்வு வேலைத் திட்டம் தொடர்பாக இதுவரை மேற் கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் பற்றியும் இங்கு
விரிவாக கேட்டறியப்பட்டது.

இக் கூட்டத்தில் கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.ஜரூப் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் உட்பட கிராம உத்தியோகத்தர்கள்,
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.