மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியிலுள்ள அல்ஹிலால் வாசிகசாலை இன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு இந்த வாசிகசாலை மூடப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் விசேட பிராத்தனையுடன் . மீண்டும் வாசிகசாலை திறக்கப்பட்டது.
வாசிகசாலை தினமும் பிற்பகல் 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை திறந்திருக்;கும் என வாசிகசாலை நிருவாக அறிவித்துள்ளனர்.
நிகழ்வில் மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் முகம்;மட் நசீம்,மௌலவி பாஹீம் ரப்பானி, மௌலவி ஸாஜஹான் ரப்பாணி,அல்ஹிலால் சனசமூக நிலைய முக்கியஸ்தர் ரஜப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.