மட்டு. கிரான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் பலி

0
135

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின்; பேரில்லாவெளி, ஈச்சயடி, தடானை பிரதேசத்தில் உள்ள விவசாய பண்ணையொன்றில் யானைக்கு வைக்கப்பட்ட
சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற இச் சம்பவத்தில், கிரானைச் சேர்ந்த 50 வயதுடைய ஆறுமுகம் யோகநாதன், 21 வயதுடைய விநாயகமூர்த்தி சுதர்சன் ஆகியோரே உயிரிழந்தனர்.
வயலுக்குள் வந்த மாடுகளை துரத்தி சென்ற போத இவர்கள் சட்டவிரோத மின்வேலியில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விவசாயப் பண்ணையை குத்தகைக்கு பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மரண விசாரணைகளை திடிர் மரண விசாரணை அதிகாரி ச.ராஜ்குமார்
மேற்கொண்டிருந்தார்.
கடந்த வருடமும் இதே பண்ணையில், சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.