மட்டு.குழந்தை இயேசு பாலர்
பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி

0
341

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு குழந்தை இயேசு பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் அருட்சகோதரி நிமலா நிதர்ஷpனி தலைமையில் பாடசாலை மைதானத்தில் இன்று இடம்பெற்றது .
தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களின் கற்றல் மற்றும் பாடவிதான செயல்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விளையாட்டு போட்டி நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு தொழிநுட்ப கற்கை நிலைய இயக்குனர் அருட்பணி எஸ்.ஜெ.ஜேம்ஸ் அடிகளார்,கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.புவிராஜா ,விசேட விருந்தினராக புனித ஜோசெப் கொன்வெண்ட் மேலாளர் அருட்சகோதரி மரியா ஜீவந்தி,விசேட அதிதிகளாக,மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் டி.மேகராஜ்,மட்டக்களப்பு தீரனியம் திறந்த பாடசாலை அதிபர் அருட்சகோதரர் மைக்கல்,தீரனியம் திறந்த பாடசாலை அருட்சகோதரர் ஸ்டீபன் மெதிவு ,ஆகியோருடன் பாடசாலை சிறார்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டதையடுத்து அதிதிகளினால் தேசிய மற்றும் இல்லகொடிகள் ஏற்றபட்டு மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு,மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.