மட்டு.கோறளைப்பற்று மத்தியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் வேலிகள் அகற்றம்

0
116

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவில், கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில், நாவலடிப் பகுதியில், சட்டவிரோதமாகச் சுவீகரிக்கப்பட்டு, எல்லையிடப்பட்ட காணிகளின் வேலிகளை மகாவலி அதிகார சபையின் அதிகாரிகள் பொலிஸாரின் பாதுகாப்போடு அகற்றினர்.


இதன்போது பொலிசாருக்கும் காணிகளை சுவீகரித்தவர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. நிலமைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அப் பகுதியில் பெருமளவான பொலிஸார் கடமைக்கு அழைக்கப்பட்டனர்.


சட்டவிரோதமாகச் சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடந்த 6.8.2023 அன்று சம்பவ இடததிற்கு வருகை தந்து பொதுமக்களுடன் கலந்துரையாடியதோடு, மகாவலி அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கும் இவ் விடயத்தை எடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.