மட்டக்களப்பு – சந்திவெளி பிரதேசத்தில் நேற்றையதினம் இரண்டுமோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பெண்ணொருவரும் அவரது மகளும் படுகாயமடைந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதியைக்கடந்து எதிரேஉள்ள குறுக்கு வீதிக்குச்செல்ல முற்பட்ட பெண்ணின்மோட்டார் சைக்கிளுடன் பிரதான வீதி வழியாகவந்தமோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.உயிரிழந்த இளைஞர் மது போதையுடன் தலைக்கவசமின்றிஅதிகவேகத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்
22 வயதுடைய கிரான் – கோரகல்லிமடு பகுதியைச் சேர்ந்த ஜீவரெட்னம் சனுஜன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.இவர் தனது வீட்டிலிருந்து சித்தாண்டி பிரதேசத்திலுள்ள நண்பர்ஒருவரது வீட்டிற்குச் சென்ற வேளை இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் சம்பவஇடத்திற்குச்சென்றுவிசாரணைகளைமேற்கொண்டார்.சடலம்சந்திவெளிவைத்தியசாலையிலிருந்து பிரேதபரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.விபத்து சம்பவம் தொடர்பாக சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.