‘உள்ளூர் அரசியலில் பெண்கள்’எனும் தொனிப்பொருளில் சமத்துவம் மற்றும் நிலைபேறான நாளைக்காக அவளுடன் ஒன்றுபடுவோம் கிழக்குமாகாணத்தை மையப்படுத்திய பிராந்திய மகாநாடு மட்டக்களப்பு தன்னாமுனை மியாமி நகரில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் யு.என்.டி.பி . நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கான இயலளவு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மகாநாட்டில் உள்ளூர் அரசியலிலுள்ள பெண்களுடைய அடைவுகள், உள்ளூர் அரசியலில் பெண்களின் சமத்துவமான அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் உண்மைகளை உறுதி செய்வதற்கான சமூகம் மற்றும் கட்டமைப்புக்கள் ரீதியான மாற்றங்கள் தொடர்பான அனுபவ கலந்துறையாடல்கள் இடம்பெற்றன .
நிகழ்வில் கிழக்குமாகாண யு.என்.டி.பி நிறுவன இணைப்பாளர் ஷமீர் ,ஐக்கிய மக்கள் சக்தி உபதலைவர் உமா சந்திரா பிரகாஷ், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் செயலாளர் மங்களா சங்கர்,முன்னாள் கிழக்குமாகாண தவிசாளர் ஆரியவாதி களபதி உட்பட பெண் அரசியல்வாதிகள்,உள்ளூராட்சி சபைகளின பிரதிநிதிகள்,பெண் உரிமை செயற்பட்டார்கள்,சிவில் சமூக அமைப்புக்களின்இளைஞர்,யுவதிகள்,மற்றும் யு.என்.டி.பி நிறுவன உத்தியோகத்தர்களை கலந்துகொண்டனர்.