மட்டு.நகர் ஜாமிஉஸ்ஸலாம் ஜூம்ஆப்
பள்ளிவாயலில் இரத்ததான நிகழ்வு

0
194

மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ்ஸலாம் ஜூம் ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில் எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கின்றாறோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவர் போலாவார் எனும் வாசகத்தின் கீழ் இரத்ததான நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் அவரச வேண்டுகோளுக்கு இணங்க தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ்ஸலாம் ஜூம் ஆப் பள்ளிவாயலின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகர் ஸலாமா பவுண்டேசன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு ஸலாமா பவுண்டேசன் தலைவர் எ எல் எஸ் .ஹமீட் தலைமையில் ஜாமிஉஸ்ஸலாம் ஜீம் ஆப் பள்ளிவாயலில் இன்று நடைபெற்றது

இரத்ததான நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் எப் .பி .மதன் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல் .ஆர் .குமார சிறி , மாநகர ஆணையாளர் என் .மதிவண்ணன் , கிராம சேவை உத்தியோகத்தர் என் . அற்புதராஜ் , மதத்தலைவர்களான சிவபாலன் குருக்கள் , அருட்தந்தை நவாஜி , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் தவநேசன் உட்பட வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், ஜாமிஉஸ்ஸலாம் ஜூம் ஆப் பள்ளிவாயலின் மௌலவி ,மட்டக்களப்பு வர்த்தக சங்க பிரதிநிதிகள் மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேசன் உறுப்பினர்கள் , இளைஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு இரத்ததான நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்