30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.மறை மாவட்டத்திற்கு புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகர்

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலக ஆயராக, அருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகையை, திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார். நேற்றைய தினம் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை ஓய்வு பெற்றுள்ள நிலையில், மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கு அப்போஸ்தலிக்க பரிபாலகராக அதி வணக்கத்துக்குரிய ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை மட்டக்களப்பு மாவட்ட ஆயராக திருதந்தையினால் அறிவிக்கபட்டார்.


திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஒரே மறை மாவட்டமாக இருந்த நிலையில், 2008 ஆம் ஆண்டு துணை ஆயராக ஜோசப் பொன்னையா ஆண்டகை நியமனம் பெற்று பணியாற்றிய நிலையில், 2012 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் தனி மறை மாவட்டமாக பிரகடனப்படுத்த பட்டபோது, ஆயராக திருநிலைப்பட்ட ஜோசப் பொன்னையா ஆண்டகை 12 ஆண்டுகள் மட்டக்களப்பு ஆயர் பணியினை முன்னெடுத்து, ஓய்வு பெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை, திருதந்தை பிரான்சிஸால் அறிவிக்கபட்டார். அருட்கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை தேசிய கத்தோலிக்க இளைஞர் சம்மேளனத்தின் பொறுப்பு ஆயராகவும், கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயராகவும் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் அவர் மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக நியமிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles