மட்டு.மெதடிஸ்த கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி

0
192

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கலந்துகொண்டார்.

விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள்,ஆயுதம் ஏந்திய மாணவர் படையணியினரால் வரவேற்கப்பட்டனர். ஒலிம்பிக் தீபம் ஏற்பட்டு, மாணவர்களின் அணிநடை இடம்பெற்று, விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
விளையாட்டு நிகழ்வில், காட்மன் இல்லம் 389 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், சோமநாதர் இல்லம் 383புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், ஓல்ட் இல்லம் 337 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும், கோல்டம் இல்லம் 304 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் விளையாட்டு நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், பிரதிக் கல்விப்பணிப்பாளர் சரணியா ஆகியோர் கலந்துகொண்டதுடன்.
கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு சுகாதார பிரதிப்பிராந்திய பணிப்பாளர் டொக்டர் ஆர்.நவலோகிதன், மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான
உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், மாவட்ட விளையாட்டுப் உத்தியோகஸ்தர் வி.ஈஸ்வரன் மாவட்ட வன உதவிப்பணிப்பாளர் என்.ஜெயச்சந்திரனும் கலந்துகொண்டனர்.