சமுர்த்தி திணைக்களத்தினால் ‘சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை’ எனும் தொனிப்பொருளில் தேசிய மரநடுகை தின சுற்றாடல் வேலைத்திட்டம் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வவுணதீவு பொது மயானத்தில் நிழல் மரங்கள் நடப்பட்டதுடன் பிரதேச செயலகம் சமுர்த்தி வங்கிகள் போன்றவற்றில் பயன்தரும் பழ மரக்கன்றுகளும் நடப்பட்டது.
பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் கே.தங்கத்துரை, வங்கி வலய முகாமையாளர் ஏ.பிரியதர்சினி, சமுதாய அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
சமுத்தி திணைக்களத்தினால் 17.09.2022 தொடக்கம் 23.09.2022 வரை பிரகடனப்படுத்தி இம் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.