மட்டக்களப்பு வாழைச்சேனை கலைச் சங்கமத்தினால் ‘காரிகை கனவு’ எனும் தொணிப் பொருளிலான விருது வழங்கும் விழா நடாத்தப்பட்டது.
கலைச் சங்கமத்தின் தலைவி ஜெயராணி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உள்ளுர் ஆடை வடிவமைப்பாளர்களினால் தயாரிக்கப்பட்ட ஆடைகள், கேக் மற்றும் அலங்காரப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு பெசன் சோவும் இடம்பெற்றது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அழகு கலை நிபுணர்கள், ஒப்பனையாளர்கள்,ஆடை வடிவமைப்பாளர்கள் புகைப்படக் கலைஞர்கள்,ஊடகவியலாளர்கள், மற்றும் அதிதிகள் நினைவுச் சின்னங்களும் பதக்கங்களும் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார்,உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.கே.அமலினி ,கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்திரகுமார என பலரும் கலந்து கொண்டனர்.