மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுக்கான முதற்கட்ட கடன் வசதியை இடைநிறுத்தியது சீன வங்கி!

0
161

இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட கடன் வசதியை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தும் முடிவு ஆகியவை
இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட 51 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளது. இதனால் சுமார் 2ஆயிரம் பேர் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீன பிரஜைகள் ஏற்கனவே பணிகளைக் கைவிட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடன் வசதி நிறுத்தப்பட்டதால், திட்டம் தாமதமாகும் என்றும், இதன் காரணமாக திட்டத்திற்கு பொறுப்பான ஒப்பந்ததாரர் அபராதம்
செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தகவலால் தெரிவிக்கின்றன. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதும் இடைநிறுத்தப்பட்டுள்ள கடன் வசதியை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.