மத்திய வங்கியின் வட்டி வீதங்களை தற்போதைய நிலைகளில் பராமரிக்க தீர்மானம்

0
74

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை அவற்றின் தற்போதைய நிலைகளில் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நிலையான வைப்பு வசதியை 8.50 சதவீதமாகவும், நிலையான கடன் வசதியை 9.50 சதவீதமாகவும் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.