மனிதக் கடத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் அம்பலாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெலிபடன்வில, நோனாகம, அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர் தாய்லாந்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி சுமார் 19 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைதானவர் தாய்லாந்தில் தொழில் தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தச சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
தப்பியோடிய சந்தேக நபர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்பாளர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் நேற்று (06) அம்பாந்தோட்டை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.