மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு தயாராகும் இலங்கை!

0
185

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டை இலங்கை எதிர்கொள்ளவுள்ள நிலையில், உலக நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளிப்பை வழங்கி வருகிறது. கடந்த திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு, கொழும்பில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்துள்ளது. மனித உரிமைகள் மற்றும் சட்டத்திட்டங்கள் தொடர்பாக இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலுக்குப் பின்னரான இலங்கையின் நிலைமைகள் மற்றும் அரசியல் யாப்புடன் அமைந்த சட்ட நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகள் போன்றவை குறித்த தெளிவுப்படுத்தல்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில் விரிவான மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அலி சப்ரி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.