சர்வதேச மனித உரிமை தினத்தை (டிசம்பர் 10) முன்னிட்டுஇ மனித உரிமை மீறல்களுக்காக மற்றொரு இலங்கை இராணுவ அதிகாரி மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்கா இதனை அறிவித்துள்ளது.
டிரிபோலி பிளட்டூன் என அழைக்கப்படும் இலங்கை இரகசிய இராணுவ படைப்பிரிவின் முன்னாள் தலைவர் பிரபாத் புலத்வத்தஇ 2018ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயரை சித்திரவதைக்கு உட்படுத்தியமை உட்பட்ட குற்றச்சாட்டுக்களில் தொடர்பு கொண்டிருந்ததாக தெரிவித்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படிஇ குறித்த அதிகாரிக்கு அமெரிக்காவில் உள்ள அனைத்து சொத்து மற்றும் நலன்களும் தடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அவரது உடனடி குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர்களாக்கப்பட்டுள்ளனர்.