மன்னாரில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பித்து வைப்பு.

0
148

மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெல் அறுவடை விழா நேற்று மாலை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இசங்கன் குளம் பகுதியில் இடம்பெற்றது.

ஆக்காட்டிவெளி கமநல சேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த சிறு போக நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் கலந்து கொண்டார். நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், கமநல சேவைகள் நிலைய அதிகாரிகள், விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்பயிர்ச்செய்கை வைபவ ரீதியாக அறுவடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.