பாதாள உலகக் குழு உறுப்பினரான மன்ன ரமேஸை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
டுபாயில் தலைமறைவாகியிருந்த மன்ன ரமேஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கடந்த 07ஆம் திகதி அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதனையடுத்து மேல் மாகாண தெற்கு குற்றவியல் விசாரணை பிரிவில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.