மட்டக்களப்பு மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையை, சிங்களவர்கள் மத்தியில் தவறான பிரசாரம் மூலம் மடைமாற்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முயற்சிப்பதாக மட்டக்களப்பு கால்நடைப் பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
41 நாட்களைக் கடந்து கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்கிறது. இரவு பகலாக, தொடரும் போராட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டு, தனது
ஆதரவை வழங்கினார்.