மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் மற்ற உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
மூன்று குழந்தைகளின் தந்தையான ராசமாணிக்கம் செல்வகுமார் (வயது 44) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் விறகு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கருப்பன்தைல மரக்கிளை முறிந்து வீழ்ந்தால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு வரப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மஸ்கெலியா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.