காலி – பத்தேகம பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2.30 அளவில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மரம் முறிந்த வேளையில் தந்தை மற்றும் புதல்வர்கள் இருவரும் பெண் ஒருவரும் வீட்டிற்குள் வசித்துள்ளனர்.
எனினும் எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.