மருத்துவ சீட்டு இன்றி பல்வேறு ஆபத்தான மருந்துகளை வைத்திருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் குணசிறி தலைமையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரணசூரிய அவர்களின் மேற்பார்வையில், பசறை முகாமின் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஜி.என். சேபால உள்ளிட்ட அதிகாரிகள் குழு நேற்று (13) பதுளை பொலிஸ் களத்தில் புதிய மருந்தகம் மற்றும் பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக இரண்டு சோதனைகளை மேற்கொண்டனர்.
குறித்த சோதனையில் பதுளை மற்றும் தெமோதர பிரதேசத்தில் வசிக்கும் 46 மற்றும் 58 வயதுடைய இருவர், மருத்துவ சீட்டு இன்றி ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 891 வகையான மருந்துகளை வைத்திருந்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைக்காக மருந்துப் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.