மருந்து பிரச்சினை தொடர்பில் வௌியான தகவல்

0
192

இலங்கையில் மருந்துகளின் தரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தில் உள்ள குறைபாடுகளே பிரதான காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் அதனை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமண குற்றம்சாட்டியுள்ளார்.