
பலகல, நெல்லியகம பகுதியில் உள்ள ஒரு வீட்டொன்றிலிருற்து இன்று (04) காலை மர்மமான முறையில் இறந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிரியாகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற தகவலினடிப்படையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் நெல்லியகமவில் உள்ள பலகல முகவரியில் வசித்து வந்த ஒரு குழந்தையின் தாயான முகமது ரியாஸ் பாத்திமா ரிஃப்னா என்ற 25 வயதுடையவரென பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.