மலேசியாவில் இருந்து 22 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை ஏற்றிய கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளதாக தேசிய உர நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும் போக பயிர்ச்செய்கைக்கு குறித்த உரம் பயன்படுத்தப்படும் என தேசிய உர அலுவலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுகே தெரிவித்துள்ளார். முன்னதாக, 13 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.