ஒஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் இரவு நேர அஞ்சல் ரயில் தாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில் பாதையை சீராக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது……