மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், மொட்டு கட்சி ஆட்சி, எதிர்காலத்தில் மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டமொன்று நாமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று கண்டியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பன நடைபெறுவதற்கு இன்னும் காலம் உள்ளது. உள்ளூராட்சிச் சபைத் தேர்தலும் அடுத்த வருடம் மார்ச்சில்தான் நடைபெறும். டிசம்பர் ஆகும்போது நாட்டு பிரச்னைகள் தீர்ந்திருக்கும். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மொட்டு கட்சி அரசாங்கம் எதிர்காலத்தில் உருவாகும் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.