மஹியங்கனை அல்ஹேனத்தலாவ வனப்பகுதியில் சமீப காலமாக பெரியளவி்ல் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுவந்த இடத்தை சுற்றிவளைத்து, 20 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு, 850, 750 மில்லிலீற்றர் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் திஸ்ஸபுர – கமகும்புர, மாபகதேவாவ பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காட்டுப் பகுதியில் சகிப்பு உற்பத்தியில் ஒருவர் ஈடுபடுவதாக மஹியங்கனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான நபரை நாளை திங்கட்கிழமை (10) மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.