28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாணவர்களுக்கான சிப்தொற
புலமைப்பரிசில் வழங்கல்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பானவு இன்று வழங்கி வைக்கப்பட்டது
சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதிய திட்டத்தின் கீழ் சமுத்தி பயனாளிகள் குடும்பத்தில் இருந்து கல்வி பொதுத்தரா தர உயர்தர வகுப்பில் 2021 2023 கல்வியாண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவும் பொருட்டு இந்த சிப்தொற புலமை பரிசில் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது

இத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 161 மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொர பலமைப் பரிசில் கொடுப்னவு வழங்கப்பட உள்ளது இதில் 63 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப வைபவம் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.இதன் மூலம் ஒரு மாதத்துக்கு 1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு இக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் மற்றும் காத்தாங்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ் சில்மியா காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் உட்பட சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திட்ட முகாமையாளர் வலய முஉமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles