முல்லைத்தீவு கேப்பாபிலவில், உணவுக் கடை நடத்தி வரும் நபர் ஒருவர், 14 வயதான பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த நிலையில், எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் உடலில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த பெற்றோர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை, மாணவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அதன் பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட முள்ளியவளை பொலிஸார், கேப்பாபிலவில் உணவுக் கடை நடத்தி வரும், 55 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்தனர்.
தொடர்ந்து, சந்தேக நபர்; நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.