மார்ச்சில் 125,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை !

0
175
மார்ச் மாதத்தில் 125,495 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.பெப்ரவரி 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்த மாதத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை நாடுகளை சேந்த சுற்றுலா பயணிகளே இலங்கைக்கு அதிகம் வந்துள்ளனர்.
இந்த வருடம் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாகவும், அந்த எதிர்பார்ப்பு 2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.