28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு செற்றிட்டம்

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவில் சின்ன புள்ளுமலையில் அமைந்துள்ள கலிக்குளம் சி.பி.எம் நிறுவனத்தின் அனுசரணையுடன் வை.எம்.சி.ஏ நிறுவனத்தினால் பல்வேறு செற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாரத்தை மேம்படுத்து வகையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட குளத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 மாற்றுத்திறனாளிகளுக்கு மீன் பிடி தொழிலில் ஈடுபடும் வகையில் மீன்பிடி உபகரணங்கள் இன்று வழங்;கப்பட்டதுடன் மீன்பிடியாளர்களுக்கான இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.


குலத்தை அண்டிய பிரதேசத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் குளத்தில் மீன் அறுவடை நிகழ்வும் இடம் பெற்றது.


வை.எம்.சி.ஏ நிறுவன திட்ட உத்தியோத்தர் அலெக்ஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சமூக சேவை உத்தியோகத்தர் டிமலேஸ், நன்னீர் மீன் வளர்ப்பு அதிகார சபையின் பிரதேச உத்தியோகத்தர் அகமட், கமநல அமைப்பின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகளின் உறுப்பினர்கள் வை.எம்.சி.ஏ நிறுவன உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles