மாலைதீவில் இடம்பெறும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில், 25 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடவுச்சீட்டு விதிகளை மீறிய குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட, மேலும் 161 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதனால், 186 வெளிநாட்டவர்கள், மாலைதீவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் என, அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
43 இந்தியர்கள், 25 இலங்கையர்கள், 8 நேபாளிகள் மற்றும் 83 பங்களாதேசியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நாடு கடத்தப்பட்ட திகதி அறிவிக்கப்படவில்லை.