கடந்த 24 மணி நேரத்தில் கண்டி, கேகாலை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் நல்ல காற்றின் தரம் பதிவாகியுள்ளதுடன், ஏனைய பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவுகள் பதிவாகியுள்ளன.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவிலும், கேகாலை, நுவரெலியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் ஆரோக்கியமான நிலையிலும் காணப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான அளவைக் குறிக்கும் வகையில் காற்றின் தரக்குறியீடு சுட்டெண் 38 – 64 க்கு இடையில் இருக்கும்.
அத்துடன், கண்டி, கேகாலை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு மிதமான நிலையில் இருக்கும்.
