மினி உலக முடிவில் விழுந்த இருவருக்கு கடுங்காயம்

0
104

மடுல்சீம மினி உலக முடிவுக்கு அருகில் உள்ள ராகல பீடபூமியில் கடந்த 23ஆம் திகதி மாலை பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தச் சென்ற இளைஞர்களில் இருவர் குன்றின் மீதிலிருந்து விழுந்து படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடுல்சீம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த இளைஞர்களில் ஒருவரின் பிறந்தநாள் கடந்த 23ஆம் திகதியாகும்.  மேலும் நான்கு நண்பர்களுடன் மினி உலக முடிவுக்கு கீழே உள்ள ரகல சானுவா என்ற இடத்திற்குச் சென்று அங்கு மதுபான விருந்து வைத்துள்ளார்.

 பிறந்தநாள் விருந்து வைத்த இளைஞன் பாறையில் இருந்து தவறி விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற முயன்ற நண்பரும் பாறையில் விழுந்து விழுந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக பதுளை  வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சுஜித் வேதமுல்லவின் ஆலோசனையின் பேரில் மடுல்சீம பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.