கம்பஹாவில் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் உன்னருவ பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 01.66 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பாக மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.